செய்தி
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம்!
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 09:34.27 AM GMT ]
கச்சத்தீவு ஆலய விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் போர்வையில், தீவிரவாதிகள் ஊடுருவல் இடம்பெறலாம், என்ற சந்தேகத்தினால், எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய விழாவிற்கு, எதிர்வரும் 23 ம் திகதி இராமேஸ்வரத்திலிருந்து 150 க்கும் மேற்பட்ட படகுகளில் பக்தர்கள் பயணிக்க உள்ளனர்.

கடவுச்சீட்டு இல்லாமல் பயணிக்கலாம் என்பதால் பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள், மற்றும் இலங்கைக்குள் அகதிகளும் செல்ல முயற்சிக்கலாம் என்பதால், இந்த ஏற்பாட்டை இந்திய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனவே கியூ, உளவு பிரிவுகள், மற்றும் சுங்க அதிகாரிகள், இந்திய கடற்படையினர், பக்தர்களை தீவிரமாக கண்காணித்து அனுப்ப வேண்டும், என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் அகதிகள் மற்றும் குற்றவழக்கில் தொடர்புள்ள 28 பேர், கச்சத்தீவு செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டனர்.

அத்துடன். இலங்கையிலிருந்து ஒரு பெண் குழந்தையுடன், பக்தர்களுடன் கலந்து இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார்.

இது போல் வேறு யாரும் ஊடுருவாமல் இருக்க கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளாதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

விழாவிற்கு செல்லும் பக்தர்கள் எந்த படகில் செல்கிறார்களோ அதே படகில் தான் திரும்பி வரவேண்டும் என்ற நடைமுறையை செயற்படுத்தவுள்ளனர்.

கச்சத்தீவிலிருந்து புதியவர்கள் யாரையும் ஏற்றி வரக்கூடாது எனவும் படகு செலுத்துனர்களுக்கு இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 07:55.46 PM ]
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 07:39.49 PM ]
இலங்கை அரசு தம் தவறை மூடி மறைக்க எத்தனிக்காமல் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 23-05-2013, 04:11.57 PM ]
ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து  இலங்கை ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:56.38 PM ]
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள்.
[ Thursday, 23-05-2013, 02:51.21 PM ]
பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் எஸ்.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 17:13:15 GMT ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.