கனடாவில் எலிசெபெத் மகாராணியின் வைரவிழாப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட நான்கு தமிழர்கள்
இந்த வாரம் நமக்கு கிடைத்த செய்திகளின்படி நான்கு சேவையாளர்கள் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் கலாபம் தொலைக்காட்சி நிறுவன அதிபரும் முதுதமிழர் நலன்களில் அக்கறை கொண்டவருமான திரு ஸ்ரீனிவாசன் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோ டானியல் அவர்களால் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அடுத்த சேவையாளர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் அதிபரும் கனடா தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவருமான திரு சின்னையா சிவனேசன் மற்றும் ஸ்காபுறோ தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான திரு எம். தேவராஜா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்களால் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
அடுத்த சேவையாளர் பிரபல வைத்தியரும் மருத்துவ மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருபவருமான டாக்டர் கே. சாந்தகுமார் கடந்த வாரம் கனடிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு வைபவம் ஒன்றில் என்டிபி கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற ஜெய்க் லேற்றன் அவர்களின் துணைவியாரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒலுவியா சோ அவர்களினால் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
இவ்வாறாக பல சமூக சேவையாளர்கள் தொடர்ச்சியாக கௌரவிக்கப்படுவதை நமது கனடிய தமிழர் சமூகம் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றது.

