செய்தி
 Photo
வெள்ளை வான் காரர்களால் நாட்டில் நல்லாட்சியை நடாத்த முடியாது! தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும்: சந்திரிக்கா
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 12:01.33 AM GMT ]
வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்கள் மற்றும் மனிதர்களை மரத்தில் கட்டி வைத்து தண்டிப்பவர்களால் நாட்டில் நல்லாட்சியை நடாத்த முடியாது. ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

விஜய குமாரதுங்கவின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கணவரான மறைந்த விஜய குமாரணதுங்கவின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்து விட்டு அங்கு அவர் உரையாற்றுகையில்,

நாட்டை ஆட்சி செய்யும் அனைவரும் இன்று நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்துவதற்கு முயற்சிப்பது இல்லை. வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்கள் மற்றும் மனிதர்களை மரத்தில் கட்டி வைத்து தண்டிப்பவர்களால் நாட்டில் நல்லாட்சியை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

ஹொரகொல்லையில் எங்களுக்கு 4000 ஏக்கர் காணிகள் அங்கு இருந்தன. 1956ம் ஆண்டு எனது தந்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்து பாதுகாப்பதற்கு 500 ஏக்கர் காணியை விற்றார். பின்னர் எனது தாயும் எங்களை வளர்ப்பதற்கு காணிகளை விற்றார்.

எனது தாயாரே கொண்டுவந்த சட்டமூலம் ஒன்றின் பிரகாரம் எங்களுக்கு சொந்தமான 3000 ஏக்கர் காணியை அரசுக்கு வழங்கினார். எனக்கு மிகுதியானது 200 ஏக்கர் மட்டுமே. நான் ஜனாதிபதி பதவியை துறந்ததன் பிறகு ஐந்து முறை காணியை விற்றுள்ளேன்.

எனக்கு வேரு எந்த ஒரு வருமானமும் இல்லை என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

நான் ஜனாதிபதியாக இருந்தபோது எனது இரு பிள்ளைகளுக்கும் ஒரேயொரு வாகனம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் பயணம் சென்றால் அவர் வரும் வரை மற்றவர் காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இருவரும் சேர்ந்து போக வேண்டும்.

ஆனால் இன்று ஒருவருக்கு 11 வாகனங்கள், மற்றவருக்கு 12 வாகனங்கள், இன்னுமொருவருக்கு 15 வாகனங்கள் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களில் படித்தவர்கள் கைவிரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட இல்லை. ஆகக்கூடிய பணத்தை சேர்த்துக் கொள்ளக் கூடிய துறையாக இன்று நாடாளுமன்ற அங்கத்துவம் காணப்படுகிறது.

விஜய குமாரணதுங்க சிறைக்கு செல்லும் போது எனது மகனுக்கு மூன்று மாதங்கள். அப்போது பால் மா வாங்க கூட ஐந்து சதம் இருக்கவில்லை.

அந்தநேரம் மேர்வின் சில்வாவின் குடும்பமும் எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தன. மேர்வின் சில்வாவும் சிறையில் இருந்தார். இவர்கள் அனைவருக்கும் உணவளிப்பதற்காக ஐந்து சதம் கூட யாரிடமும் கேட்கவில்லை. எங்கள் காணியில் இருந்த மரங்களை விற்று அவர்களை நான் காப்பாற்றினேன்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது எனக்கு சொந்தம் இல்லாத ஐந்து சதத்தைக்கூட நான் எடுத்தது இல்லை. அதேபோன்று எனது அரசாங்க அங்கத்தவர்களையும் இயன்றளவு அதிலிருந்து தடுத்தேன். ஆனால் இன்றைய நிலைமை மாறி விட்டது.

நாட்டின் ஆட்சியை பற்றி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பெருமளவு கற்பழிப்பு செய்பவர்கள் அரச தரப்பு கிராமிய மட்ட உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவைகளை தடுப்பதற்கு கூட அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 10:17.51 PM ]
’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 09:14.25 PM ]
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
[ Friday, 24-05-2013, 05:58.20 PM ]

முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

[ Friday, 24-05-2013, 05:55.17 PM ]
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடபகுதியின் மனிதாபிமான உதவிக்கான தேவைகள் குறித்து ஐநாவின் முக்கிய அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இன்று கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.
[ Friday, 24-05-2013, 03:31.36 PM ]
கடந்த 18ம் நாள் காலி முகத்திடலில் நடைபெற்ற போர் வெற்றி விழா அணிவகுப்பின் போது, சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படைத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 19:34:02 GMT ]
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
[ Friday, 24-05-2013 10:45:18 GMT ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[ Friday, 24-05-2013 19:54:44 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.